புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   558
Zoom In NormalZoom Out

தடக்கை 

புலவுநாற்றத்த பைந்தடி 

பூநாற்றத்த புகைகொளீஇ யூன்றுவை

கறிசோறுண்டு வருந்துதொழி லல்லது

பிறிதுதொழி    லறியா வாகலி னன்றும்

மெல்லிய பெரும தாமேநல்லவர்க்

காரணங்  காகிய  மார்பிற்  பொருநர்க்

கிருநிலத்  தன்ன நோன்மைச்

செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே.
 

திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை)
 

சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதன்  கபிலர் கைப்பற்றி,
‘மெல்லியவாமால் நுங்கை’ எனக் கபிலர் பாடியது.
 

(இ - ள்.) வன்கண்மையை உடைய கொலையானையாலே காவலை
யுடைய    கணையமரத்தை    முறித்து    இரும்பாற்   செய்யப்பட்ட
அழகுசெய்த    அங்குசத்தால்    முன்னர்க்   கடாவி   அதுசெய்யும்
வினையைப்  பின்வேண்டு  மளவிலே  பிடிக்கவும்,  வலிய நிலத்தைக்
குந்தாலியால்  இடித்துச்செய்த  குழிந்த  கிடங்கின்கண் நீர்ப்பரப்பினது
ஆழமாகிய  உயர்ச்சியைக்  கருதி  அதன்கட்  செல்லாமல்  மிகைத்த
செலவினையுடைய   குதிரையைக்   குசை  தாங்கி  வேண்டுமளவிலே
பிடிக்கவும்,     அம்பறாத்தூணிபொருந்திய    முதுகையுடையையாய்த்
தேர்மேலே    நின்று   வில்லினது   வலியநாணாற்   பிறந்த   வடுப்
பொருந்தும்படி  அம்பைச்  செலுத்தவும்,  பரிசிலர்க்குப்  பெறுதற்கரிய
அணிகலங்களை அளிக்கவும், தலைவ! வலியவாகும் நின் முழந்தாளைப்
பொருந்திய    பெரிய    கைகள்;   புலானாற்றத்தை   யுடையவாகிய
செவ்வித்தடியைப் பூநாற்றத்தவாகிய புகையைக்