புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   559
Zoom In NormalZoom Out

துவையையும்     கறியையும்   சோற்றையும்  உண்டு   வருந்துஞ்
செயலல்லது   வேறு   செயலறியா  வாகலான்,  அவைதாம்  பெரிதும்
மெல்லியவாயின; பெரும ! பெண்டிர்கட்கு ஆற்றுதற்கரிய வருத்தமாகிய
மார்பினையும்     பொருவார்க்குத்    துளக்கப்படாமையிற்    பெரிய
நிலம்போன்ற    வலியினையும்   உடைய,   போரின்கண்ணே மிக்க
சேயையொப்பாய்! நின்னைப் பாடுவாருடைய கைகள் - எ - று.
 

கொளீஇ     (13)  என்னுமெச்சம்  அமைத்தவென்னும் ஒருசொல்
வருவித்து  முடிக்கப்பட்டது;  கொளுத்தவெனத்  திரித்து, அவ்வூனென
ஒரு சுட்டு வருவித்து அதனோடு முடிப்பினும் அமையும்.
 

உண்டு     (14)  என்பது  பொதுவினையன்றேனும்  கறியொழிந்த
வற்றிற்கெல்லாம்  சேறலின்,  பன்மைபற்றி  அமைத்துக்கொள்ளப்படும்.
ஊன்   துவை  கறியொடுகூடிய  சோற்றை  உண்டென  உரைப்பினும்
அமையும் ; இதனைப் பொதுவினையென்று உரைப்பாருமுளர்.
 

குரிசில்! பெரும! சேஎய்! வலியவாகும் நின்கை; நிற்பாடுநர்கைதாம்
மெல்லியவாகுமெனக் கூட்டுக.
 

இனி, மாதாங்கவும் (7) என்பதற்கு  அகழியைக்கடக்கப்பாய்தற்குக்
குதிரைக்குசையைத் தாங்கி எடுத்துவிடவு மென்றுரைப்பாருமுளர்.
 

பாடுநர் (19) எனத் தம்மைப் படர்க்கையாகக் கூறினார்.
 

தம் கையின் மென்மையது  இயல்புகூறுவார்,  அரசன்கையின் வலிய
இயல்புங் கூறினமையான், இஃது இயன்மொழியாயிற்று,
 

(15)

 கடுந்தேர்  குழித்த  ஞெள்ள  லாங்கண்  வெள்வாய்க் கழுதைப் புல்லி