கொள்ளு மிரும்பல் யானை |
உடலுந ருட்க வீங்கிக் கடலென |
வானீர்க் கூக்குந் தானை யானாது |
கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப |
இடியென முழங்கு முரசின் |
வரையா வீகைக் குடவர் கோவே. |
திணை - வாகை; துறை - அரசவாகை; இயன்மொழியுமாம். |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை வலிதிற் போய்க் கட்டிலெய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது. |
(இ - ள்.) தென்றிசைக்கட் கன்னியும் வடதிசைக்கண் இமயமும் கீழ்த்திசைக்கண்ணும் மேற்றிசைக்கண்ணும் கடலும் எல்லையாக நடுவு பட்ட நிலத்துக் குன்றும் மலையும் காடும் நாடும் என இவற்றையுடையோர் ஒரு பெற்றிப்பட்டு வழிபாடு கூறத் தீத்தொழிலைப் போக்கிக் கோலைச் செவ்விதாக்கி ஆறிலொன்றாகிய இறையை உண்டு நடுவுநிலைமையைச் செய்து தடையின்றாக உருண்ட ஒளியையுடைய சக்கரத்தால் நிலமுழுதையும் ஆண்டோரது மரபைக் காத்தவனே! குலைதாழ்ந்த கோட்புக்க தெங்கினையும் அகன்ற கழனியையும் மலையாகிய வேலியையும் நிலாப்போன்ற மணலையுடைய அகன்ற கடற்கரையையும் தெளிந்த கழியிடத்துத் தீப்போலும் பூவினையுமுடைய குளிர்ந்த தொண்டியிலுள்ளோருடைய அடுபொருந! யானை படுக்குங்குழிமேற் பாவின பாவைத் தன் மனச் செருக்காற் பாதுகாவாது ஆழத்தால் நெடிய குழியின்கண்ணே அகப்பட்ட பெருமை |
 |