புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   566
Zoom In NormalZoom Out

பொறுத்தற்கரிய வலியாற் பகையை மதியாது நீயுற்ற பெரியதளர்ச்சி
நீங்கப்   பிறிதொரு   சூழ்ச்சியாற்   போய்ப்   பலரும்  மகிழப்பரந்த
உரிமையையுடைய   இடத்தின்   நின்   சுற்றத்தார்  பலர்க்கு  நடுவே
உயர்த்துச் சொல்லப்படுதலால், நீ செழியனாற் பிணிப்புண்பதற்கு முன்பு
நின்னால்   அழிக்கப்பட்டுப்   பின்பு   தம்மரசுவௌவாது  நின்வரவு
பார்த்திருந்த   அரசர்   நமதாய்   இவனாற்கொள்ளப்பட்டு   உண்டு
அடிப்பட்டுப்போந்த  மேம்பட்ட  நிலமும் இவன்பாற் சென்றுற்ற சீரிய
அணிகலமும்    கிடைத்தலுண்டாம்,    இவனது    நெஞ்சு  நமக்கு
உரித்தாகப்பெறினென     நினைந்தும்,     நின்வரவு   பார்த்திராது
தம்மரசுவௌவிய    பகைவர்    எடுத்தகொடியையுடைய    உயர்ந்த
மதிலையும்  மிக்க  காடும்  அகழும் முதலாய காவலையுடைய அகலிய
அரணினையும்   நாம்   இனி  இழந்து  தங்குவேம்,  இவன்  நம்மை
வெகுண்டு  பார்த்தான்  மிகவென  நினைந்தும்  பகைவேந்தர்  ஏவல்
செய்யத்தொடங்குதற்குக்   காரணமாகிய  நினது  வலியுடனே  புகழை
வாழ்த்திக்காண்பேனாக வந்தேன்; பெரும! திரண்ட முகிலெனக் கருதி
மயங்கும்   பல   பரிசைப்   படையினையும்,  மலையென்று  கருதித்
தேனினந்   தங்கும்   பெரிய  பல  யானையினையும்,  மாறுபடுவோர்
அஞ்சும்படி