புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   570
Zoom In NormalZoom Out

கொய்தல் கண்டே.
 

திணை - வாகை; துறை - அரசவாகை.
 

அவனைக் கல்லாடனார் பாடியது.
 

(இ    - ள்.) மீன் விளங்கும் வானத்தின்கண் பரந்த இருள் நீங்க
ஓங்கிச்  செல்லுதல் முறைமையையுடைய தனது தன்மையிற் பிழையாது
வலிய  வெம்மை  முறுகிய  உட்குப்பொருந்திய ஞாயிறு நிலாவிளங்கும்
திங்களுடனே    நிலத்தைப்   பொருந்தினாற்போலப்   பகைத்தற்கரிய
வலியையுடைய    வஞ்சினங்கூறிய   இருவேந்தரை   வருத்துதற்கரிய
போர்க்களத்தின்கண்ணே   மாயப்   பொருது   அவருடைய   வாராற்
பிணிப்புற்ற   முரசத்தைக்  கொண்டகாலத்து  நின்றநிலையிலே  நின்று
நின்னைச்  சூழ்ந்து  கொண்ட  வீரரைப்  புரிந்தெறிதலால்  திண்ணிய
கொளுத்துக்  கலங்கிக்  கெடுதல்  பிழைத்தது,  நினது  வேல்; செழிய!
முலைபொலிந்த  மார்பம்  அழல அறைந்துகொண்டுஅறிவுமயங்கியுற்ற
அளவற்ற     அழுகையாரவாரத்தையுடைய    ஒண்ணுதல்    மகளிர்
கைம்மைநோன்பிலே   மிக  விளங்கும்  அறலை  யொக்கும்  அழகிய
மெல்லிய குவிந்த கரிய மயிரினைக் கொய்த பரிசைக் கண்டு-எ - று.
 

செழிய!   மகளிர்  கூந்தல்கொய்தல்கண்டு  நின்வேல்   சிதைதல்
உய்ந்ததெனக் கூட்டுக.
  

ஈண்டுச்  செலன்மரபெனவும்,    ஐம்பாற்குவையிருங்கூந்தலெனவும்
பாடமோதுவாருமுளர்.