உணவெனப் படுவது நிலத்தொடு நீரே |
நீரு நிலனும் புணரி யோரீண் |
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே |
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன் |
வைப்பிற் றாயினு நண்ணி யாளும் |
இறைவன் றாட்குத வாதே யதனால் |
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே |
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத் |
தட்டோ ரம்ம விவட்டட் டோரே |
தள்ளா தோரிவட் டள்ளா தோரே. |
திணை - பொதுவியல்;துறை - முதுமொழிக்காஞ்சி (பி - ம். பொருண்மொழிக் காஞ்சி) |
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது. |
(இ - ள்.) ஒலிக்கின்ற கடலானது முழுதுஞ் சூழப்பட்டுப் பரந்து கிடக்கின்ற அகன்ற உலகத்தைத் தமதுமுயற்சியாற் கொண்டு தம்முடைய புகழை உலகத்தின்கண்ணே நிறுத்தித் தாமேயாண்ட வலியோருடைய வழித்தோன்றினோய்! ஒன்றைப் பத்துமுறையாக அடுக்கப் பட்டதாகிய கோடி என்னும் எண்ணினைக்கடையெண்ணாக இருத்திய சங்கு முதலாகிய பேரெண்ணினை உடைத்தாகநினது வாழ்நாள்; நீரின்கண்ணே உறத்தாழ்ந்த குறிய காஞ்சியினது பூவைக் கவரும் இனமாகிய வாளையினையும் நுண்ணிய ஆரலினையும் பரிய வராலினையும் நிறமுடைய கெடிற்றினையும் உடைத்தாகிய குழிந்த கிடங்கினையும் வானமஞ்சும் திருந்திய நெடிய மதிலையும் உடைத்தாகிய வளவிய பழைய ஊரினையுடைய வலியவேந்தே! நீ போகக்கடவ மறுமையுலகத்தின்கண் நுகருஞ் செல்வத்தைவிரும்பினும், உலகத்தைக் காப்பாரது தோள்வலியைக்கெடுத்து நீ ஒருவனுமே தலைவனாதலை விரும்பினும், மிக்க நல்லபுகழை இவ்வுலகத்தே |
|
 |