நிறுத்துதலை விரும்பினும், அவ்வேட்கைக்குத் தக்க செய்கையைக் கேட்பாயாக, இப்பொழுது; பெரியோய்! நீரை இன்றியமையாத உடம்பிற்கெல்லாம் உணவு கொடுத்தவர்கள்உயிரைக் கொடுத்தார்; உணவை முதலாகவுடைத்து அவ்வுணவால் உளதாகிய உடம்பு; ஆதலால், உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடுகூடிய நீர்; அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள் இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர்; நெல் முதலாயவற்றை வித்திமழையைப் பார்த்திருக்கும் புல்லிய நிலம் (புன்செய்) இடமகன்ற நிலத்தை உடைத்தாயினும் அது பொருந்தியாளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது; ஆதலால், கொல்லும் போரையுடைய செழிய! இதனைக் கடைப்பிடித்து விரைந்து நிலங்குழிந்தவிடத்தே நீர்நிலை மிகும் பரிசு தளைத்தோர், தாம் செல்லும் உலகத்துச் செல்வம் முதலாகிய மூன்றினையும் இவ்வுலகத்துத் தம் பேரோடு தளைத்தோராவார்; அந்நீரைத் தளையாதவர்; இவ்வுலகத்துத் தம் பெயரைத் தளையாதோர் - எ - று. |