புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   574
Zoom In NormalZoom Out

படைத்தோரெனவே    செல்லுமுலகத்துச்           செல்வமும்,
வித்திவானோக்கும்    புன்புலம்    இறைவன்றாட்கு   உதவாதெனவே
நீர்நிலைபெருகத்தட்டலால்     வானோக்கவேண்டாத      நன்புலம்
இறைவன்றாட்கு    உதவி   ஞாலங்காவலர்   தோள்வலிமுருக்குதலும்,
நிலனெளிமருங்கின் நீர்நிலைபெருகத் தட்டோர் இவட்டட்டோ ரெனவே
நல்லிசை நிறுத்தலும் கூறப்பட்டன.

நீர்நிலைபெருகத்தட்கவே அறன்முதன்மூன்றும்    பயக்குமென்பது
கூறினமையான், இது முதுமொழிக்காஞ்சியாயிற்று. 

(19) இமிழ்கடல் வளைஇய வீண்டகன்கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து
மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத்தொருமையும்
நின்னோடு தூக்கிய வென்வேற்செழிய
இரும்புலி வேட்டுவன் பொறியறிந்துமாட்டிய
பெருங்கல் லடாரும் போன்மெனவிரும்பி
முயங்கினே னல்லனோ யானேமயங்கிக்
குன்றத் திறுத்த குரீஇயினம் போல
அம்புசென் றிறுத்த வரும்புண்யானைத்
தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து
நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள
எறிந்துகளம் படுத்த வேந்துவாள்வலத்தர்
எந்தையொடு கிடந்தோரெம்புன்றலைப் புதல்வர
இன்ன விறலு முளகொ னமக்கென
மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே.  

திணை - வாகை, துறை - அரசவாகை. 

அவனை அவர் பாடியது. 

(இ-ள்) ஒலிக்குங் கடலாற் அணுச்செறிந்த அகன்றஉலகத்துக்கண்
தமிழப்படை கைகலந்த தலை