புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   576
Zoom In NormalZoom Out

கண்ணோடிய எனவும் நிரனிறையாகக் கொள்க. 

போர்முடிதலாற்  போயின  கூற்றை   நாணியும்   கண்ணோடியும்
போயிற்றுப்போலக் கூறியது, ஓரணி (தற்குறிப்பேற்றம்) கருதிநின்றது. 

இனி,     அம்பு தைத்த யானையை வெட்டிப்படுத்தல் மறத்திற்கிழி
பென்று  பெண்டிர் இரங்கியழுதலின், கூற்றுக் கண்டு நாணிக் கண்ணோ
டியதென்று உரைப்பாருமுளர். 

(20) இருமுந்நீர்க்குட்டமும்
வியன்ஞாலத்தகலமும்
வளிவழங்குதிசையும்
வறிதுநிலைஇயகாயமும், என்றாங்
கவையளந்தறியினு மளத்தற் கரியை
அறிவுமீரமும் பெருங்க ணோட்டமும்
சோறுபடுக்குந்தீயோடு
செஞ்ஞாயிற்றுத்தெறலல்லது
பிறிதுதெறலறியார்நின் னிழல்வாழ் வோரே
திருவிலல்லது கொலைவில் லறியார்
நாஞ்சிலல்லது படையு மறியார்
திறனறிவயவரொடு தெவ்வர் தேயவப்
பிறர்மண்ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு
வயவுறுமகளிர் வேட்டுணி னல்லது
பகைவ ருண்ணாவருமண் ணினையே
அம்புதுஞ்சுங்கடியரணால்
அறந்துஞ்சுஞ்செங்கோலையே
புதுப்புள்வரினும் பழம்புட் போகினும
விதுப்புறவறியா வேமக் காப்பினை்
அனையையாகன் மாறே
மன்னுயிரெல்லா நின்னஞ் சும்மே.   

திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை)

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறையைக்
குறுங்கோழியூர்கிழார் பாடியது.  

(இ - ள்.) பெரிய கடலினது ஆழமும், அகன்ற உலகத்துப் பரப்பும்,
காற்றியங்கும் திசையும், வடிவின்றி நிலைபெற்ற ஆகாயமும் என்று