வரையறுத்தறியினும் வரையறுத்தற்கு அரியை, அறிவும் அன்பும் மிக்க கண்ணோட்டமும்; ஆகலால். சோற்றை ஆக்கும் நெருப்புடனே செஞ்ஞாயிற்றினது வெம்மையல்லது வேறு வெம்மையறியார், நின்குடை நிழற்கண் வாழ்வோர்; இந்திரவில் அல்லது பகைவரது கொலைவில்லை அறியார்; கலப்பை அல்லது வேறுபடைக்கலமும் அறியார்; போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரருடனே பகைவர் மாய அம்மாற்றாருடைய மண்ணைக்கொண்டு உண்ணுந் தலைவ! நின்னுடைய நாட்டின்கண் வேட்கைநோயுற்ற பெண்டிர் விரும்பி உண்ணினல்லது பகைவர் உண்ணப்படாத பெறுதற்கரிய மண்ணையுடையை; அம்பு தங்குங் காவலையுடைய அரணுடனே அறம் தங்கும் செவ்விய கோலையுடையை; புதுப்புள் வரினும் பழைய புள் அவ்விடத்தை விட்டுப் போகினும் அவற்றால் நடுக்கமுறுதல் அறியாத சேமமாகிய காவலையுடையை; அத்தன்மையை யுடையை யாதலான், உலகத்து நிலைபெற்ற உயிரெல்லாம், தத்தம் காதலால் நினக்கு ஏதம் வருங்கொலென்று அஞ்சும் - எ - று. அறிவும் ஈரமும் கண்ணோட்டமுமென்பனசினைவினைப்பாற்பட்டு அளத்தற்கரியை யென்னும் முதல்வினை கொண்டன. (21) புலவரையிறந்த புகழ்சா றோன்றல் நிலவரையிறந்த குண்டுகண் ணகழி வான்றோய்வன்ன புரிசை விசும்பின் மீன்பூத்தன்ன வுருவ ஞாயிற் கதிர்நுழைகல்லா மரம்பயில் கடிமிளை அருங்குறும்புடுத்த கானப் பேரெயில் கருங்கைக்கொல்லன் செந்தீ மாட்டிய இரும்பு ணீரினுமீட்டற் கரிதென வேங்கை மார்பனிரங்க வைகலும் ஆடு |