புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   578
Zoom In NormalZoom Out

முற்றியகொற்ற வேந்தே

இகழுநரிசையொடு மாயப்

புகழொடுவிளங்கிப் பூக்கநின் வேலே.
 

திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை)
 

கானப்பேரெயில்  கடந்த  உக்கிரப்  பெருவழுதியை ஐயூர் மூலங்கிழார் பாடியது.
 
 

(இ   - ள்.) நின்னைப் பாடுவாரது அறிவின்  எல்லையைக் கடந்த
புகழமைந்த  தலைவ! நிலவெல்லையைக் கடந்த பாதலத்தேயுற ஆழ்ந்த
இடத்தையுடைய அகழியினையும் உயர்ச்சியான் வானைப்பொருந்துவது
போன்ற    மதிலையும்    அவ்வானிடத்து    மீனைப்பூத்தாற்போன்ற
வடிவையுடைய  சூட்டினையும்  வெயிற்கதிர்  நுழையாத மரஞ்செறிந்த
காவற்காட்டினையும்   உடைத்தாய்   அணைதற்கரிய   சிற்றரண்களாற்
சூழப்பட்ட    கானப்பேரென்னும்   அரண்,   வலிய   கையையுடைய
கொல்லனாற்  செந்தீயின் கண்ணே மாட்டப்பட்ட இரும்புண்ட நீரினும்
மீட்டற்கரிதெனக்கருதி    வேங்கை   மார்பன்   வருந்த   நாடோறும்
வென்றிகொளத்   தழைத்த   தும்பையையுடைய,  புலவர்  பாடப்படுந்
துறைகளை  முடித்த  வெற்றியினையுடைய வேந்தே! நின்னை மதியாத
பகைவர்   தம்முடைய   புகழுடனே  போன்ற  வெற்றிப்  புகழுடனே
விளங்கிப் பொலிவதாக நின் வேல்- எ - று.
 

கானப்பேரெயில்     மீட்டற்கரிதென   வேங்கைமார்பன் இரங்கப்
பாடுதுறை  முற்றிய  கொற்றவேந்தே!  நின்வேல்  பூக்கவெனக்  கூட்டி
வினை முடிவுசெய்க.
  

குழைத்தவென்பது குழைந்தவென மெலிந்து