பட்டொலிக்கும் மணியுடனே உயர்ந்த கோட்டினையுடையனவும் பிறை வடிவாக இடப்பட்ட மத்தகத்துடனே சினம்பொருந்திய பார்வையையுடையனவும் பரந்த அடியுடனே பரிய கழுத்தையுடையனவும் தேனழிந்த மலைபோலத் தேனீயொலிக்கும் மணம் நாறும் மதத்துடனே புண்வழலை வடியும் பெரிய தலையையுடையனவுமாகிய வலிமிக்க இளங்களிறு கம்பத்தைப் பொருந்தித் தான் நின்றநிலையிலே நின்று அசையப் பக்கத்தே நின்று கிரணத்தை விடுகின்ற வானத்தின்கண்ணே தங்கும் திங்கள்போலும் முத்தமாலையையுடைய வெண்கொற்றக்குடையினது நிழற்கண்ணே தம்பக்கத்து வாளில்லாதோர் அக்குடையே காவலாக உறங்க அசைந்த செந்நெற்கதிரால் வேயப்பட்ட மெல்லிய கரும்பாற்கட்டப்பட்ட ஒழுங்குபட்ட கூரை விழாவெடுத்துக் கொள்ளப்பட்ட இடம்போல் வேறுவேறாகப் பொலிவு தோன்றக் குற்று அமையாத உலக்கையொலியுடனே மிக்க ஆரவாரத்தையுடைய அகன்றவிடத்துப் பொன்னாற் செய்யப்பட்ட இதழையுடைய பசிய தும்பையுடனே மிசையே அசைந்த தலையினையுடைய பனந்தோட்டைச் செருகிச் சினத்தையுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தொலி ஓதத்தையுடைய கடலொலி போலக் கிளர்ந்து பொங்கப் படைப்பெருமையாற் பகைவருட்கும் மதிப்புடைமையின் இடங்காவாது |