புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   581
Zoom In NormalZoom Out

நின்னைப்  பாடிய  விளங்கிய  செவ்விய நாப்பின்னைப் பிறருடைய
புகழைச்   சொல்லாமற்   பாதுகாவாது   கொடுக்கும்   வலியையுடைய
எங்கோவே!     மாந்தரஞ்சேரலிரும்பொறை     பாதுகாத்த     நாடு
தேவருலகத்தை   யொக்குமென்று   பிறர்   சொல்லக்  கேட்டு  வந்து
கட்கினிதாகக்  கண்டேன்;  பெருமானே!  முயற்சி  வெறுப்பில்லையாய்
வேற்றுநாட்டின்கட்  சென்றுவிடும் படையுடனே சோறுண்டாக நடப்பை;
நீ மடியாயாதலான்-எ-று.
 

கதிர்சோருமதியென   இயையும்; கதிர்சோருமென்னும் சினைவினை
மதியென்னும்     முதலொடு     முடிந்தது;    கதிர்சோருமாலையென
இயைப்பினும் அமையும்.
  

பாய்நின்றென்று பாடமோதுவாரும் உளர்.
  

கூரை பொலிவுதோன்றவென  இடத்துநிகழ்பொருளின்   தொழில்
இடத்துமேல் ஏறிநின்றது.
 

செரீஇயென்னும் வினையெச்சத்தை  டுமெனஒருசொல் வருவித்து
அதனோடுமுடிக்க.
 

நிலைஇ  வழங்கக் காப்புறங்கப் பொலிவுதோன்றப் பெயர்புபொங்க
என்னும்   செயவெனெச்சங்களும்.   வாய்காவாதென்னும்   எதிர்மறை
வினையெச்சமும்     பரந்துபட்டவென்னும்    பெயரெச்சவினையொடு
முடிந்தன.
  

காப்பாள!     பொருந!  சேஎய்!  பெரும!  எங்கோ!  பெரும!  நீ
துஞ்சாயாதலாற் சோறுபட நடத்தி; அதனால் இரும்பொறை ஓம்பியநாடு
புத்தேளுலகத்தற்றெனக்  கேட்டுவந்து இனிது கண்டிசின்; நின்படைப்பு
வாழியவெனக்  கூட்டி  வினைமுடிவுசெய்க;  அன்றி,  எங்கோவே!  நீ
துஞ்சாதபடியாலே, இரும்பொறையோம்பியநாடு புத்தேளுலகத்தற்றெனப்