புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   582
Zoom In NormalZoom Out

நிற்பாடிய     அலங்குசெந்நாப்  பிறரிசை  நுவலாதபடி  வந்து இனிது
கண்டேன்;   நினது   படைப்பொடு  வாழ்வாயாகவென  இயைப்பினும்
அமையும். 

இசின் தன்மைக்கண் வந்தது. 

சோறுபடநடத்தி    யென்பதனை    வினையெச்சமாக   உரைப்பினும்
அமையும். 

உயர்மருப்பினென்பதூஉம்,     செறனோக்கினென்பதூஉம்,
பணையெருத்தினென்பதூஉம் பாடம். 

(23) வெளிறினோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந்துண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங்கடம்பின் பாசிலைத் தெரியற்
சூர்நவைமுருகன் சுற்றத் தன்னநின்
கூர்நல்லம்பிற் கொடுவிற் கூளியர்
கொள்வதுகொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பதமொழிய வீசிய புலனும்
வடிநவில்நவியம் பாய்தலி னூர்தொறும்
கடிமரந்துளங்கிய காவு நெடுநகர்
வினைபுனைநல்லில் வெவ்வெரி நைப்பக்
கனையெரியுரறிய மருங்கு நோக்கி
நண்ணார்நாண நாடொறுந் தலைச்சென்
றின்னுமின்னபல செய்குவன் யாவரும்
துன்னல்போகிய துணிவி னோனென
ஞாலநெளிய வீண்டிய வியன்படை
ஆலங்கானத் தமர்கடந் தட்ட
காலமுன்பநிற் கண்டனென் வருவல்
அறுமருப்பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச்
சிறுமறிதழீஇய தெறிநடை மடப்பிணை
பூளைநீடிய வெருவரு பறந்தலை
வேளைவெண்பூக் கறிக்கும
ஆளிலத்த மாகிய காடே.  

திணையும் துறையும் அவை; துறை - நல்லிசைவஞ்சியுமாம். (வாகை) 

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்றநெடுஞ்செழியனைக்
கல்லாடனார் பாடியது. 

(இ-ள்.) வெண்மையில்லாத     வலிய    வயிரக்கம்பத்தையுடைய
கூடத்தில்  நிற்றலை  வெறுத்துச்சென்று யானை படிந்து நீருண்டதாகக்
கலக்கமுற்ற   துறையையும்   கார்காலத்து   நறிய  கடம்பினது  பசிய
இலையோடு