புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   583
Zoom In NormalZoom Out

கூளிச்சுற்றத்தை யொக்கும் நின்னுடைய கூரிய நல்ல அம்பினையும்
வளைந்த  வில்லினையுமுடைய  மறவர்  தம்மாற்  கொள்ளலாவதனை
முகந்துகொண்டு கொள்ளாத    ஒழிபொருளை   மாற்றார்   முகந்து
கொள்ளப்படும் உணவாக்காமற் சிதறிய நிலங்களையும் வடித்தல்பயின்ற
கோடாலி  வெட்டுதலான்  ஊர்தோறும்  காவல்மரங்கள் நிலைகலங்கிய
காவையும்  நெடிய நகரின்கண் தொழில் புனைந்த நல்லமனைகளிடத்து
விரும்பும்   அடுதீயைக்கெடுக்க   மிக்க  தீ  முழங்கிய  பக்கத்தையும்
பார்த்துப்  பகைவர் நாண நாடோறும் அவரிடத்துச் சென்று இன்னமும்
இத்தன்மையன     பலவுஞ்    செய்குவன்,    யாவரும்    தன்னை
அணுகவொண்ணாத   சூழ்ச்சித்  தெளிவினையுடையோனெனக்  கருதி
உலகம்  பொறையாற்றாது நெளியத் திரண்ட பரந்த படையினையுடைய
தலையாலங்கானத்தின்கட்  போரை எதிர்நின்று கொன்ற காலன்போலும்
வலியையுடையோய்!   நின்னைக்   கண்டேனாய்   வந்தேன்;   அற்ற
கோட்டையுடைய பெரிய கலை புலியின்கண்ணே அகப்பட்டதாகச் சிறிய
மறியை   அணைத்துக்கொண்ட  துள்ளிய  நடையையுடைய  மெல்லிய
மான்பிணை  பூளையோங்கிய  அஞ்சத்தக்க  பாழிடத்து வேளையினது
வெளிய பூவைத்தின்னும் ஆளற்ற அருஞ்சுரமாகிய காட்டுவழியே-எ-று.
 

காலமுன்ப!   துறையும் புலனும் காவும் மருங்கும் நோக்கி இன்னும்
இன்னபல   செய்குவன்   துணிவினோனென  உட்கொண்டு  காட்டின்
கண்ணே நின்னைக் கண்டு