வந்தேனெனக் கூட்டி வினை முடிவுசெய்க. வருவலென்பது, ஈண்டு இறந்தகாலப்பொருட்டாய்நின்றது. இவனைக் காணாமுன்னே கண்டு வந்தேனென்றான், இவன்செய்த வென்றியெல்லாம் கண்டமையின். பாசிலைத்தெரியல் முருகனென இயையும். நவியம்பாய்தலென்பது, கருவி கருத்தாவாய் நின்றது. கலை புலிப்பாற்பட்டெனச் சிறுமறி தழீஇய மடப்பிணை பறந்தலை வேளைவெண்பூக்கறிக்குமென்பது, அவன் பகைவரைக் கொன்றவழி அவர் பெண்டியர் தம் இளம்புதல்வரை ஓம்புதற்பொருட்டு இறந்துபடாது அடகு தின்று உயிர் வாழ்கின்றாரென்பதோர் பொருள்தோன்ற நின்றது. இனித் துணிவினோனென்று பிறர்சொல்லவெனவும், கண்டனென் வருவலென்பனைக் காலமயக்கமாக்கிக் கலங்கிய துறைமுதலாயினவற்றை நோக்கி இன்னும் இவ்வாறு பகைவர் நாட்டின்கண் மேற்செல்லவனென நினைந்து காட்டிடத்தே நின்னைக் காணிவந்தேனெனவும் உரைப்பாரும் உளர். புன்கம் இவன்பாற் செல்வதற்குமுன்பு பெற்ற உணவாகவும், அமலைக்கொழுஞ்சோறு இவன்பாற் பெற்ற உணவாகவும் கொள்க; அன்றிச் சென்ற இடந்தோறும் பெற்ற உணவாகவுரைப்பினும் அமையும். மன்றத்துச் சூடு கிழித்த ஒக்கலொடுகூட வேண்டுமொழிபயிற்றி ஆர்ந்த பாணர்க்கெனக் கூட்டுக. பாணர்க்கெனத் தம்மைப் பிறர்போலக் கூறினார். ஆயிழைகணவ! செய்திகொன்றோர்க்கு உய்தியில்லென அறம்பாடிற்று; ஆதலால், பாணர்க்குச் செல்வமுழுவதுஞ்செய்தோன், எங்கோன் வளவன் வாழ்கவென்று காலையந்தியும் மாலையந்தியும் நின் தாள்பாடேனாயின், பல்கதிர்ச்செல்வன் படுபறியான்; பெரும! யானோ தஞ்சம்; சான்றோர் செய்த நன்றுண்டாயின், நுண்டுளியினும் பலகாலம் வாழ்வாயாக வெனக் கூட்டுக. கோவதை முதலாயின வாக்காற்சொல்லவும்படாமையின், ஆன்முலை யறுத்தவெனவும், மகளிர்கருச்சிதைத்தவெனவும், பார்ப்பார்த் தப்பிய வெனவும் மறைத்துக் கூறப்பட்டன. இது, பரிசில்பெற்றுப் போகின்றானை நீ எம்மை நினைத்து வருவையோ என்றாற்கு இவ்வாறு செய்த நின்னை வளவன்வாழ்க வென்று பாடேனாயின், யானிருக்குமிடத்துப் பல்கதிர்ச் செல்வன் படுதலறியான், அதனால் இம்மையின்பம் பெறேனெனவும், செய்ந்நன்றிகொன்றோர்க்கு உய்தியில்லையெனவே மறுமையின்கண் நரகம்புகுவேனெனவும் கூறியதாகக் கொள்க.
(24) நெல்லரியுமிருந்தொழுவர்
செஞ்ஞாயிற்றுவெயின்முனையிற்
றெண்கடற்றிரைமிசைப்பாயுந்து
திண்டிமில்வன்பரதவர்
வெப்புடையமட்டுண்டு
தண்குரவைச்சீர்தூங்குந்து
தூவற்கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க்கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளைமகளிர் தலைக்கை தரூஉந்து
வண்டுபட
வெப்புடைய மட்டுண்டு தண்குரவைச் சீர்தூங்குந்து தூவற் கலித்த தேம்பாய் புன்னை மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து வண்டுபட
|