இனி, குறுநணி காண்குவதாக’ என்பதற்கு நம்மிடத்து மிகவும் மனத்தாற்காணுங் காட்சி உளதாகவென்பது கூடாது, நீ செய்த கொடுமையானென்றுரைப்பினும் அமையும். |
(210) | மன்பதை காக்குநின் புரைமைநோக்கா |
தன்புகண் மாறிய வறனில் காட்சியொடு நும்ம னோருமற் றினைய ராயின் எம்ம னோரிவட் பிறவலர் மாதோ செயிர்தீர் கொள்கை யெம்வெங் காதலி உயிர்சிறி துடைய ளாயி னெம்வயின் உள்ளா திருத்தலோ வரிதே யதனால் அறனில் கூற்றந் திறனின்று துணியப் பிறனா யினன்கொ லிறீஇயரென் னுயிரென நுவல்வுறு சிறுமையள் பலபுலந் துறையும் இடுக்கண் மனையோ டீரிய விந்நிலை விடுத்தேன் வாழியர் குருசி லுதுக்காண் அவல நெஞ்சமொடு செல்வனிற் கறுத்தோர் அருங்கடி முனையரண் போலப் பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறுத்தே. |
திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, பரிசில்கடாநிலை) சேரமான் குடக்கோச்சேரலிரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங்குன்றூர்கிழார் பாடியது. |
(இ - ள்.) உயிர்ப்பன்மையைக்காக்கும் நினது உயர்ச்சியைப் பாராது காதல் கண்மாறிய அறமில்லாத பார்வையுடனேகூடி நும்போல்வார் யாவரும் இதற்கு ஒத்த அறிவையுடையராய் அருள்மாறுவாராயின் எம்போல்வார் இவ்வுலகத்துப் பிறவாதொழியக்கடவர்; குற்றந்தீர்ந்த கற்பினையுடையளாய எம்மை விரும்பியகாதலி இறந்துபடாது உயிர்வாழ்வுடையாளாகக் கூடின் எம்மிடத்து நினையாதிருத்தல் |
 |