புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   819
Zoom In NormalZoom Out

அரிது;  அதனால்,  அறனில்லாத கூற்றம் திறப்பாடின்றி உயிர்கொளத்
துணிய   இறந்துபட்டான்  கொல்லோ?  என்னுயிர்  கெடுவதாகவென்று
சொல்லுதலுற்ற    நோயையுடையாளாய்ப்   பலபட   வெறுத்துறையும்
மனைவியது துன்பம் தீர்க்க வேண்டி இப்பொழுதே விடைகொண்டேன்;
வாழ்வாயாக;   இறைவ!   இதனைப்   பாராய்:  இன்னாமையையுடைய
நெஞ்சத்துடனேபோவேன்,   நின்னை  வெகுண்டாரது  அணுகுதற்கரிய
காவலையுடைய  முனையிடத்து  அரணைப்போலப்  பெரிய  செயலற்ற
எனது வறுமையைமுன்போகவிட்டு-எ - று.

குருசிலே!  நும்மனோரும் இனையராயின் எம்மனோர் இவட்பிறவார்;
எம்    காதலி   உயிர்   சிறிது   உடையளாயின்   நினையாதிருத்தல்
அரிது;        அதனால்,        அம்மனையோள்      இடுக்கண்
தீர்க்கவேண்டி   இப்பொழுதே      விடுத்தேன்;     நிற்கறுத்தோர்
முனையரண்போலக்  கையற்ற  என்  புலம்பு முந்துறுத்துச் செல்வேன்;
வாழியரெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.

‘உதுக்காண்’ என்றது அச்செலவை.

என்வறுமை  என்னை  விட்டு்  நீங்கப்போதலையொழியப் புலம்பை
முந்துறுத்துக்கொண்டு   போகாநின்றேனென  இரங்கிக்  கூறியவதனால்,
வாழியர் குருசில் என்பது இகழ்ச்சிக்குறிப்பாயிற்று.

‘உயிர்வெங் காதலி’ என்று பாடமோதுவாரும் உளர். 

(211) அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலே
றணங்குடை யரவி னருந்தலை துமிய
நின்றுகாண் பன்ன நீண்மலை மிளிரக்
குன்றுதூ வெறியு மரவம் போல
முரசெழுந் திரங்குந் தானையொடு தலைச்சென்
றரைசுபடக் கடக்கு முரைசா றோன்றனின்
உள்ளி வந்தவோங்குநிலைப் பரிசிலென்
வள்ளியை யாதலின் வணங்குவ