புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   820
Zoom In NormalZoom Out

கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின்

உள்ளியது முடித்தோய் மன்ற முன்னாட்

கையுள் ளதுபோற் காட்டி வழிநாட்

பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்

நாணா யாயினு நாணக் கூறியென்

நுணங்கு செந்நா வணங்க வேத்திப்

பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின

ஆடுகொள் வியன்மார்பு தொழுதனென் பழிச்சிச்

செல்வ லத்தை யானே வைகலும்

வல்சியின்மையின் வயின்வயின் மாறி

இல்லெலி மடிந்த தொல்சுவர் வரைப்பிற்

பாஅ லின்மையிற் பல்பாடு சுவைத்து

முலைக்கோண் மறந்த புதல்வனொடு

மனைத்தொலைந் திருந்தவென் வாணுதற் படர்ந்தே.
 

திணையும்      துறையும்    அவை.      (பாடாண்டிணை,
பரிசில்கடாநிலை)
 

அவனை அவர் பாடியது,
 

(இ - ள்.)    அஞ்சத்தக்க     முறைமையையுடைய    வெய்ய
சினத்தையுடைய   மழையின்கண்   உள்ள  இடியேறு,  அச்சமுடைய
பாம்பினது     அணுகுதற்கரிய     தலை    துணிய,  நிலவகலத்தை
நின்றுபார்ப்பதுபோன்ற   நீண்டமலை  பிறழச்  சிறுமலைதூவ  எறியும்
ஓசைபோல  வீரமுரசு  கிளர்ந்தொலிக்கும்  படையுடனே  மேற்சென்று
வேந்தர்   பட   எதிர்   நின்றுகொல்லும்   புகழமைந்த  தலைவ!  நீ
வள்ளியையாதலால்  எமக்குத்  தாழ்ந்து பரிசில் நல்குவன் இவனென்று
நின்னைநினைந்துவந்த  உயர்ந்த  நிலைமையையுடைய பரிசிலேனாகிய
யான்  நினக்கு எம்மை எதிரேற்றுக்கொள்ளா மாந்தரது கொடுமையைச்
சொல்லவும் நின்னுடைய நினைவேசெய்தாய், நிச்சயமாக; முன்னைநாட்
பரிசில் கையிலே புகுந்ததுபோலக் காட்டிப்