பெற்றுநின்ற நினது புறநிலைமைக்கு யான்வருந்திய வருத்தத்திற்கு நீதான் நாணாயாயினும் நீ நாணச்சொல்லி எனது நுண்ணிய ஆராய்ச்சியையுடைய செவ்விய நா வருந்தப் புகழ்ந்து நாடோறும் பாடப் பாடப் பின்னரும் பாடவேண்டும் புகழை ஏற்றுக்கொண்ட நினது வென்றி பொருந்திய அகன்றமார்பை வணங்கி வாழ்த்திப்போவேன் யான்; நாடோறும் உணவில்லாமையான் இடந்தோறும் இடந்தோறும் மாறிமாறி அகழ்தலால் இல்லெலி மடிந்த பழையசுவராகிய எல்லையையுடைய, பாலில்லாமையாற் பலபடி சுவைத்து முலையுண்டலை வெறுத்த பிள்ளையுடனே மனையின்கண்ணே வறுமையுற்றிருந்த என்னுடைய ஒளிபொருந்திய நுதலையுடையாளை நினைந்து-எ - று. |
தோன்றல்! நின் உள்ளி வந்த பரிசிலேனாகிய நான் கூற, நின் உள்ளியது செய்தாயாதலான் வருத்தங் கூறி ஏத்தித் தொழுதனென் பழிச்சி வரைப்பின் மனைக்கண்ணே புதல்வனொடு தொலைந்திருந்த என் வாணுதலை நினைந்துசெல்வல் யானெனக் கூட்டி வினைமுடிவு செய்க. |
நாணக்கூறியென்றதன்பின்னே ஏத்திப் பழிச்சிச் செல்வலென் றமையான், அவை குறிப்புமொழி. வரைப்பின் மனையென இயையும். |
‘வள்ளிய னாகலின் வணங்குவ னிவனென’ என்று பாடமாயின், வண்மையையுடையனாதலால் இவன் எமக்குத் தாழ்ந்து பரிசிலளிப்பனெனக் கருதியென்க. |
‘வள்ளியை யாகலின் வணங்குவ னிவனெனக், கொள்ளா மாந்தர் கொடுமை கூற’ என்றதற்கு வள்ளியையாதலின் இவனை வணங்கு வேனென நினைந்துவணங்க அதுபாராது நின்பாற் பரிசில் பெறாத மாந்தர்.தூவவெறியுமென்பது, தூவெறியுமென வகரங்கெட முடிதல் புறநடையாற்கொள்க; விகாரமெனினும் அமையும். |
‘தூவவெறியும்’என்பதூஉம் பாடம். |
புறநிலை என்பதற்குப் |
 |