புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   825
Zoom In NormalZoom Out

நல்வினையை;     விண்ணோரது    பெறுதற்கரிய    உலகத்தின்கண்
அமைந்தவர்  விரைந்த விருப்பத்தோடு விருந்தாக ஏற்றுக்கொள்ள-எ -
று.

மற்று : அசை. தில் :விழைவின்கண் வந்தது.

வானோருலகென்றது, ஒட்டன்றி ஒருபெயராய் நின்றது.

வேந்தே!  நின்மறனொழிக;  ஆன்றவர்  விருந்தெதிர்கொளற்குநன்று
செய்தல்வேண்டும்;     ஆதலால்,    அதற்கு    விரைந்தெழுவாயாக;
நின்னுள்ளம் வாழ்வதாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

செல்வமும் பழியும் சினைவினைப்பாற்பட்டு முதல்வினைகொண்டன.

எஞ்சுதல் -இவர்க்குப்பின்னும் நிற்றல்.

தாணிழல் மயங்காதென்பதற்கு    நினக்கு    ஒருதீங்கும்   வாராம
லென்றதாகக்கொள்க.

இனி     ‘அதனா   லன்ன    தாதலு   மறிவோய்’   என்றதற்கு
உயர்ந்தோருலகம்   எய்துவது   காரணத்தால்   அத்தாயம்  அவர்க்கு
அப்படியேயுரித்து;    அன்னதாதல்    நீயறிவையென    முற்றாகவும்,
அழிந்தோர்க்கு  ஏமமாகும்  நின்  தாணிழலென  முற்றாக்கி மயங்காது
தெளிந்துநின்று நன்றுசெய்தல் வேண்டுமெனவும் உரைப்பாரும் உளர்.

‘மாவெங்  காட்சியொடு  மாறெதிர்ந் தெழுந்தவர்’  என்று  பாடம்
ஓதுவாரும் உளர்.

(214) செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தறவத் தலையே.

திணை - பொதுவியல்; துறை -பொருண்மொழிக்காஞ்சி.

அவன் வடக்கிருந்தான் சொற்றது.

(இ - ள்.) அறவினையைச்செய்வேமோ அல்லேமோவென்று