பொதுளிய வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளீஇ ஆய்மக ளட்ட வம்புளி மிதவை அவரை கொய்யுந ரார மாந்தும் தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும் பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே. |
திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி.
|
கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் வாராரென்ற சான்றோர்க்கு அவர் வருவாரென்று சொல்லியது, |
(இ - ள்.) கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும் தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த வேளையினது வெள்ளிய பூவை வெளிய தயிரின்கட் பெய்து இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும் அவரை கொய்வார் நிறையவுண்ணும் தென்திக்கின்கட் பொதியின்மலையையுடைய பாண்டியனது நல்ல நாட்டினுள்ளும் சேய்த்தாகிய பிசிரென்னும் ஊரிடத்தானென்று சொல்லுவார், என்னுயிரைப் பாதுகாப்போனை; அவன் எமக்குச் செல்வ முடைய காலத்து நிற்பினும் யாம் இன்னாமை யுறுங்காலத்து ஆண்டு நில்லான்-எ - று. மன் : அசைநிலை. |
(216) | கேட்டன் மாத்திரை யல்ல தியாவதும் |
காண்ட லில்லா தியாண்டுபல கழிய வழுவின்று பழகிய கிழமைய ராகினும் அரிதே தோன்ற லதற்பட வொழுகலென் றையங் கொள்ளன்மி னாரறி வாளீர் இகழ்வில னினிய னியாத்த நண்பினன் புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர் பேதைச் சோழ னென்னுஞ் |
 |