புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   828
Zoom In NormalZoom Out

சிறந்த
காதற் கிழமையு முடைய னதன்றலை
இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவ னொழிக்கவவற் கிடமே.
 

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி)

அவன்  வடக்கிருந்தான்  பிசிராந்தையார்க்கு  இடனொழிக்க
வென்றது.
 

(இ - ள்.) ‘நின்னை  அவன் கேட்டிருக்கும்  அளவல்லது  சிறிது
பொழுதும்     காண்டல்கூடாது    பல்யாண்டுசெல்லத்    தவறின்றாக
மருவிப்போந்த    உரிமையையுடையோராயினும்    அரிதே   தலைவ!
அவ்வழுவாத     கூற்றிலே     படவொழுகுதல்’   என்று    கருதி
ஐயப்படாதொழிமின்;  நிறைந்த  அறிவினையுடையீர்! அவன் என்னை
என்றும்  இகழ்ச்சியிலனாய்  இனிய  குணங்களையுடையன்;   பிணித்த
நட்பினையுடையன்;  புகழ் அழியவரூஉம் பொய்ம்மையை  விரும்பான்;
தனது  பெயரை  பிறர்க்குச்  சொல்லும்பொழுது  என்னுடைய  பெயர்
பேதைமையையுடைய   சோழனென்று   எனது  பெயரைத்  தனக்குப்
பெயராகச்   சொல்லும்   மிக்க  அன்புபட்ட  உரிமையையுமுடையன்;
அதற்கு  மேலே  இப்படி யான் துயரமுறுங்காலத்து ஆண்டு நில்லான்;
இப்பொழுதே வருவன்; அவனுக்கு இடம் ஒழிக்க-எ - று.

‘அதற்பட’     என்பதற்கு  அவ்விறந்துபாட்டிலே  படவென்றும்,
‘இகழ்விலன்’     என்பதற்கு     இகழப்படுவன    குணமிலனென்றும்
உரைப்பினும் அமையும்.

பேதைச்சோழனென்றது, தான் தன்னை இழித்துக்கூறியது.
 

(217)

நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே

எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல்
அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத்
தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி
இசைமர பாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை யீங்கு வருதல்
வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்
வியத்தொறும்