புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   829
Zoom In NormalZoom Out

வியத்தொறும் வியப்பிறந் தன்றே

அதனால், தன்கோ லியங்காத் தேயத் துறையும்

சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை

அன்னோனை யிழந்தவிவ் வுலகம்

என்னா வதுகொ லளியது தானே.
 

திணை - பொதுவியல்; துறை - கையறுநிலை.
 

அவன் வடக்கிருந்தானுழைச் சென்றபிசிராந்தையாரைக் கண்டு
பொத்தியார் பாடியது.
 

(இ - ள்.)     கருதுங்காலத்து    வியக்குந்தன்மையையுடைத்து,
எத்துணையும்  பெரியதலைமையுடனே  கூடியும்  இவ்விடத்தே இவன்
சிறப்புக்களைக்  கைவிட்டுவரத்  துணிதல்;  இவன்  இவ்வாறு துணிந்த
அதனினும்   வியக்குந்   தன்மையையுடைத்து,   வேற்று  வேந்தனது
நாட்டின்கண்    விளக்கம்    அமைந்த   சான்றோன்   பாதுகாத்துப்
புகழ்மேம்பாடாக  நட்பே  பற்றுக்  கோடாக  இத்தன்மைத்தாகிய  ஓர்
இன்னாக்காலத்து   இவ்விடத்து   வருதல்;   இவ்வாறு  வருவனென்று
துணிந்துசொல்லிய  வேந்தனது  மிகுதியும்  அவன்  சொல்லிய  சொற்
பழுதின்றாக  வந்தவனது  அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும்
வியப்புக்    கைமிக்கது;    ஆதலால்,    தன்செங்கோல்    செல்லாத
தேயத்துறையும்     அமைந்தோனது     நெஞ்சைத்    தன்னிடத்தே
உரித்தாகப்பெற்ற     பழைய     புகழையுடைய    அப்பெற்றிப்பட்ட
பெரியோனை  இழந்த  இத்தேயம் இடும்பையுறுங்கொல்லோ? இதுதான்
இரங்கத் தக்கது-எ - று.
 

இதுவென்பது, அரசினைக் கைவிட்டு இறந்துபடத்துணிதலென்றுமாம்.
 

(218)

பொன்னுந் துகிரு முத்து மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்

இடைபடச் சேய வாயினுந் தொடை