புணர்ந்
தருவிலை நன்கல மமைக்குங் காலை
ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர்
சான்றோர் பால ராப
சாலார் சாலார் பாலரா குபவே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது. (இ - ள்.) பொன்னும் பவளமும் முத்தும் நிலைபெற்ற பெரிய மலை தரப்பட்ட விரும்பத்தக்க மணியும் ஒன்றற்கொன்று இடைநிலம்படச் சேய் நிலத்தினவாயினும் கோவைபொருந்தி அரிய விலையினையுடைய நல்ல அணிகலங்களைச் செய்யுங்காலத்து ஓரிடத்துத் தோன்றினாற்போல எந்நாளும் அமைந்தோர் அமைந்தோர்பக்கத்தராவார்; அமைதியில்லார் அமைதியில்லார் பக்கத்தராவர்-எ - று. சான்றோர்குழுவினைப் புகழுங்கருத்தாகலின்,அவர்க்கேற்ற உவமம் கூறினார்; சாலாதார்க்கும் ஏற்றவுவமம் வருவித்துக்கொள்க. தொடைபுணர்ந்து தோன்றியாங்கென இயையும்.
(219) உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூ உவள்ளுர முணக்கு மள்ள
புலவுதி மாதோ நீயே
பலரா லத்தைநின் குறியிருந் தோரே.திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது. (இ - ள்.) யாற்றிடைக் குறையுட் புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்து உடம்பாகிய முழுத்தசையை வாட்டும் வீர! நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கிருந்தார் பலராதலான், யான் இதற்கு உதவாது பிற்பட வந்ததற்கு என்னை அவரோடு சொல்லி வெறுத்தி நீ-எ - று. யான் பிற்பட வந்ததற்கு என்னைப் புலந்து என்னோடு
|