புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   832
Zoom In NormalZoom Out

வென்று சொல்லுதல் இன்னாமையால் போகியவென்றார்.
 

(221)

பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே

ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
அனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னல்லிசை சூடி
நடுக லாயினன் புரவல னெனவே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
 

அவை நடுகற்கண்டு அவர் பாடியது.
 

(இ - ள்.)  பாடுநர்க்குக்கொடுத்த   பலபுகழினையும்  உடையன்;
கூத்தர்க்குக்   கொடுக்கப்பட்ட   மிக்க   அன்பினையும்   உடையன்;
அறத்திறமுடையோர்  புகழப்பட்ட  நீதிநூற்குத்தக ஆராய்ந்து நடத்திய
செங்கோலை    உடையன்;    சான்றோர்    புகழப்பட்ட   திண்ணிய
நட்பினையுடையன்;     மகளிரிடத்து     மென்மையை    யுடையன்;
வலியோரிடத்து  மிக்கவலியையுடையன்;  குற்றமற்ற கேள்வியையுடைய
அந்தணர்க்குப்  புகலிடம்;  அத்தன்மையையுடையோனென்று கருதாது
அத்தகுதியையுடையோனை அவ்வாறு கருதாத கூற்றம் அவனது இனிய
உயிர்  கொடுபோயிற்று; அதனால், பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை
அணைத்துக்கொண்டு     அக்கூற்றத்தை     வைவேமாக     வாரீர்,
மெய்யுரையையுடைய புலவீர்! அகலிய இடத்தினையுடைய உலகம்