புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   833
Zoom In NormalZoom Out

துன்பமிகக் கேடில்லாத நல்ல புகழ்ச்சிமாலையைச்  சூடி நடப்பட்ட
கல்லாயினான் எம்மைப் பாதுகாப்போனெனச் சொல்லி-எ - று.
 

ஈத்தபுகழ்  ஈதலாலுளதாகிய  புகழெனவும்,  ஈத்தவன்பு   ஈத்தற்கு
ஏதுவாகிய அன்பெனவுங் கொள்க.
 

வாய்மொழிப்புலவீர்!   அத்தக்கோனைக் கூற்றம் இன்னுயிருய்த்தது;
அதனாற்  புரவலன்  கல்லாயினனென  ஒக்கல் தழீஇ அதனை வைகம்
வம்மோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
 

சாயல்,   மைந்து,     புக்கிலென்பன     ஆகுபெயர்.     புக்கில்
:வினைத்தொகை.
 

கேடென்பது கெடுவெனக் குறைந்து நின்றது.
 

(222)

அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி

நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த

புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென

என்னிவ ணொழித்த வன்பி லாள

எண்ணா திருக்குவை யல்லை

என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

அவனை,   தன்மகன்  பிறந்தபின்   பெயர்த்துச்   சென்று
பொத்தியார் எனக்கு இடந்தாவென்று சொற்றது.
 

(இ - ள்.) தீயால் விளங்கிய ஒளியையுடைய ஆபரணத்தாற் சிறந்த
வடிவினையுடையளாய்  நின்  நிழலினும்  ஒரு  பொழுதும்  நீங்காத நீ
விரும்பத்தக்க  மனைவி  பெறப்பட்ட  புகழமைந்த  பிள்ளையானவன்
பிறந்தபின்  வாவெனச்சொல்லி என்னை இவ்விடத்தினின்றும் போக்கிய
என்னோடு   உறவில்லாதவனே!   உன்னோடு   என்னிடை  நட்பைக்
கருதாதிருப்பையல்லை; புகழைவிரும்புவோய்! நீ