எனக்குக் குறித்த இடம் யாது? சொல்லுவாயாக-எ-று. மற்று : அசை. அழல் போலப் பாடம் (ஒளி) செய்யும் மேனியெனினும் அமையும். |
(223) | பலர்க்குநிழ லாகி யுலகமீக் கூறித் |
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி நிலைபெறு நடுக லாகியக் கண்ணும் இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ டின்னுயிர் விரும்புங் கிழமைத் தொன்னட் புடையார் தம்முழைச் செலினே. |
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
|
கல்லாகியும் இடங்கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது. |
(இ - ள்.) பலர்க்கும் அருளுடைமையான் நிழலையொத்து உலகத்தார் மிகுத்துச் சொல்ல உலகத்தையாளுந்தன்மை முடியச்செலுத்துதற்கு மறுமையை நினைத்தால் முடிவுபோகாமையின் வடக்கிருத்தற்கு வரைந்த சிறிய இடத்தின்கண் இருந்து உயிர்நீத்தலின் நிலைபெற நடப்பட்ட கல்லான இடத்தும் இடங்கொடுத்தளிப்பர் நிச்சயமாக; உடம்போடு இனியவுயிர் விரும்பு மாறுபோல விரும்பும் உரிமையையுடைய பழையதாகிய நட்பையுடையோர் தம்மிடத்தே செல்லின்-எ - று. மீக்கூறியென்பது மீக்கூறவெனத் திரிக்கப்பட்டது; ஆணைகூறி யென்றுமாம்.
|
தொன்னட்புடையோர் தம்முழைச் செலின், இடங்கொடுத்தளிப்ப வெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.
|
அவன் நட்பினை வியந்து கூறியது.
|
(224) | அருப்பம் பேணா தமர்கடந் ததூஉம் |
துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி இரும் |
 |