புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   836
Zoom In NormalZoom Out

யோர் பழத்தின் பைங்கனி மாந்தக்

கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர

நிலமலர் வையத்து வலமுறை வளைஇ

வேந்துபீ டழித்த வேந்துவேற் றானையொ

டாற்ற லென்பதன் றோற்றங் கேளினிக்

கள்ளி போகிய களரியம் பறந்தலை

முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்

சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென

இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்

தூக்கணங் குரீஇத் தூங்குகூ டேய்ப்ப

ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி

ஞாலங் காவலர் கடைத்தலைக்

காலைத் தோன்றினு நோகோ யானே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
 

சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர்கிழார் பாடியது.
 

(இ-ள்.) முன்செல்லும் தூசிப்படையோர் பனையின்கண் உளதாகிய
நுங்கினது  இனிய  செறிவை  அயில,  இடைச்செல்வோர்  பழத்தினது
செவ்விக்கனியை   நுகர,   பின்செல்வோர்   நீங்கிய   வாயையுடைய
பிசிருடனே  சுடப்பட்ட  கிழங்கினை  நுகர  இப்படி ஒழுங்குடைத்தாகி
இடமகன்ற  உலகத்து  வலமுறையாகச்  சூழ்ந்து மன்னரை வலிகெடுத்த
மேம்பட்ட    வேலையுடைய   சேனையுடனே   கூடிய   வலியென்று
சொல்லப்பட்டதன்  விளைவை  இனிக்  கேட்பாயாக:  கள்ளியோங்கிய
களர்நிலமாகிய    பாழ்பட்ட   இடத்து   முள்ளுடைத்தாகிய   பெரிய
புறங்காட்டின்கண்ணதாயிற்று,     பெரிதும்    சேட்சென்னிநலங்கிள்ளி
கேட்பான்