புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   837
Zoom In NormalZoom Out

கொல்லோ     என   அஞ்சி  இனிய  ஓசையையுடைய  முரசுடனே
வெற்றியைச்  சொல்லாநிற்க முன்பு தூக்கணங்குருவியினது தூங்கப்பட்ட
கூட்டையொப்ப  ஒருபக்கத்தே தூங்கப்பட்ட வலத்திலே புரிந்த திரிந்த
வாயையுடைய    சங்கம்;    இப்பொழுது   உலகங்காக்கும்   அரசரது
வாயிலிடத்தே   பள்ளியெழுச்சிக்  காலத்தே  தோன்றினும்  அதனைக்
கேட்டு இறந்துபடாது நோமளவினே னாயினேன் - எ - று.
 

முன்பு  நலங்கிள்ளிசேட்சென்னி  கேட்குவன்கொல்லென ஒருசிறைக்
கொளீஇய  வலம்புரி இன்று வென்றி நுவலாநிற்கப் பறையொடு காலைத்
தோன்றினும் யான் நோவேனெனக்கூட்டி வினைமுடிவுசெய்க.
 

கேளினியென்றது நெஞ்சினை.
 

‘வென்றிநுவலா’     என்றும்,     ‘காலைதோன்றின’     என்றும்
பாடமோதுவாரும் உளர்.
 

(226)

செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும்

உற்றன் றாயினு முய்வின்று மாதோ

பாடுநர் போலக் கைதொழு தேத்தி

இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார்

மண்டமர் கடக்குந் தானைத்

திண்டேர் வளவற் கொண்ட கூற்றே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
 

சோழன்     குளமுற்றத்துத்   துஞ்சிய    கிள்ளிவளவனை
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 

(இ - ள்.) தன்மனத்துள்ளே  கறுவுகொண்டதாயினும்  வெளிப்பட
நின்று வெகுண்டதாயினும் உற்றுநின்று கையோடு மெய்தீண்டி வருத்திற்
றாயினும் அதற்குப் பிழைத்தலுண்டாகாது; பாடுவாரைப்போலத் தோன்றி
நின்று    கையாற்றொழுது   வாழ்த்தி   இரந்து   உயிர்கொண்டதாகல்
வேண்டும்;