புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   838
Zoom In NormalZoom Out

பொன்னான்     இயன்ற    மாலையினையும்   மண்டியபோரின்கண்
எதிர்நின்று  வெல்லும்  படையினையும்  திண்ணிய தேரினையுமுடைய
வளவனைக் கொண்ட கூற்று-எ - று.

பொலந்தார் வளவனென இயையும்.

கூற்றம்  இரந்ததாகல்வேண்டும்; இம்மூன்றினுள்   ஒன்றுசெய்யினும்
பிழைப்பின்றெனக் கூட்டுக.

இஃது  அவனாண்மை மிகுதியினையும் வண்மையினையும்  வியந்து
இரங்கிக் கூறியவாறு.
 

(227)

நனிபே தையே நயனில் கூற்றம்

விரகின் மையின் வித்தட் டுண்டனை
இன்னுங் காண்குவை நன்வா யாகுதல்
ஒளிறுவாண் மறவருங் களிறு மாவும்
குருதியங் குரூஉப்புனற் பொருகளத் தொழிய
நாளு மானான் கடந்தட் டென்றுநின்
வாடுபசி யருத்திய பழிதீ ராற்றல்
நின்னோ ரன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவ னென்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற் கொண்டனை யாயின்
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.

(இ - ள்.) மிகவும்  அறிவுடையையல்லை,  ஈரமில்லாத  கூற்றமே!
நினக்குப்   போவதொரு   விரகில்லாமையினான்   மேல்   விளைந்து
பயன்படும்  விதையைக்  குற்றியுண்டாய்;  ஆயின்  நினக்கு இவ்வாறு
சொல்லிய  வார்த்தை  நல்லமெய்யாதல்  இன்னமுங்  காண்பை;  ஒளி
விளங்கிய    வாட்போரைவல்ல   வீரரும்   யானையும்   குதிரையும்
உதிரமாகிய  நிறமுடைய  அழகிய  நீர்மிக்க போர்க்களத்தின்கண் மாய
நாள்தோறும்   அமையானாய்   எதிர்நின்று   கொன்று  நாள்தோறும்
நினதுமெய் வாடுதற்கேதுவாகிய பசிதீர்த்தற்கு