புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   842
Zoom In NormalZoom Out

அடியின்வெள்ளி     (முதல்  நட்சத்திரம்)  முதலாகக்  கயமாகிய
குளவடிவுபோலும்  வடிவையுடைய  புனர்பூசத்துக்  கடையின் வெள்ளி
எல்லையாக   விளங்கப்  பங்குனிமாதத்தினது  முதற்பதினைந்தின்கண்
உச்சமாகிய உத்தரம் அவ்வுச்சியினின்றும் சாய அதற்கு எட்டாமீனாகிய
மூலம்  அதற்கெதிரே எழாநிற்க அந்த உத்தரத்திற்கு முன்செல்லப்பட்ட
எட்டாம்    மீனாகிய   மிருகசீரிடமாகிய   நக்கத்திரம்   (நக்ஷத்திரம்)
துறையிடத்தே  தாழக்  கீழ்த்திசையிற் போகாது வடதிசையிற் போகாது
கடலாற்  சூழப்பட்ட  பூமிக்கு  விளக்காக  முழங்காநின்ற  தீப்பரக்கக்
காற்றாற்  பிதிர்ந்து  கிளர்ந்து  ஒருமீன்  வீழ்ந்தது  வானத்தினின்றும்;
அதனைப் பார்த்து யாமும் பிறருமாகிய பல்வேறு வகைப்பட்ட இரவலர்
எம்முடைய   பறையொலி  போலும்ஒலியையுடைய  அருவியையுடைய
நல்ல  மலைநாட்டுக்கு  வேந்தனாகியவன்  நோயையுடையனல்லனாகப்
பெறின்  அழகிதென  இரங்கிய நெஞ்சத்துடனே மடிந்தவுள்ளம் பரப்ப
யாம் அஞ்சினேம்; அஞ்சினபடியே ஏழாம் நாள் வந்ததாகலின் இன்று,
வலியையுடைய  யானை  கையை நிலத்தே யிட்டு வைத்துத் துஞ்சவும்,
திண்ணிய  வாராற்  பிணிக்கப்பட்ட  முரசம்  கண்கிழிந்து  உருளவும்,
உலகிற்குக்  காவலாகிய  வெண்கொற்றக்குடை கால் துணிந்து உலறவும்,
காற்றுப்போலும்    இயலையுடைய    மனஞ்செருக்கிய    குதிரைகள்
கதியின்றிக் கிடக்கவும் இப்படிக்கிடக்கத் தேவருலகத்தை அடைந்தான்;
ஆகையாலே, ஒள்ளிய வளையையுடைய