புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   843
Zoom In NormalZoom Out

மகளிர்க்கு     மேவப்பட்ட   துணையாகித் தனக்குத்  துணையாகிய
மகளிரையும்  மறந்தான்கொல்லோ?  பகைவரைப் பிணித்துக்கொள்ளும்
வலியையும் நச்சியோர்க்கு  அளந்து  கொடுத்தலறியாத வண்மையையு
முடைய நீலமலை போலும் மாயோன் -எ-று. 

மன்னும், தில்லும் : அசை. 

கயத்துக் குளக்கடையென்க. 

நற்றிசையாகிய     கிழக்கும்   வடக்கும் செல்லாது தீத்திசையாகிய
தெற்கும்  மேற்குமாகிய  இரண்டனுள் ஒருதிசைக்கண் வீழ்ந்ததென்றும்
ஆம்;   அன்றி   வடக்குங்கிழக்குஞ்   செல்லாதெனவே  வடகிழக்கே
வீழ்ந்ததென்றுமாம். 

படவென்றல்         இன்னாமையிற்       கைவைத்துறங்கவும்
கண்கிழிந்துருளவும்   கால்பரிந்துலறவும்   கதியின்றி   வைகவுமெனத்
தகுதிபற்றிக் கூறப்பட்டன.  

மாயோன் மகளிர்க்குறுதுணையாகித் தன்றுணையாயம் மறந்தனனோ?
இல்லையோ? யாம் மறவா நிலைமையமாயினமென இரங்கிக் கூறியவாறு. 

‘அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றென’ என்பதூஉம் பாடம். 

(230) கன்றம ராயங் கானத் தல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும்
களமலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்
வையகம் புகழ்ந்த வயங்குவினை யொள்வாட்
பொய்யா வெழினி பொருதுகளஞ் சேர
ஈன்றோ ணீத்த குழவி போலத்
தன்னமர் சுற்றந் தலைத்தலை யினையக்
கடும்பசி கலக்கிய விடும்பைகூர் நெஞ்சமொடு
நோயுழந்து வைகிய வுலகினு மிகநனி
நீயிழந் தனையே யறனில் கூற்றம்
வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான்
வீழ்குடி யுழவன் வித்துண் டாஅங்
கொருவ னாருயி ருண்ணா