புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   844
Zoom In NormalZoom Out

யாயின்

நேரார் பல்லுயிர் பருகி

ஆர்குவை மன்னோவவ னமரடு களத்தே.

திணை - அது; துறை -கையறுநிலை. (பொதுவியல்)

அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியைஅரிசில்கிழார்
பாடியது.
 

(இ - ள்.)  கன்றைமேவிய  ஆனிரை மேய்ந்தகாட்டிடத்தே  பிறி
தொன்றால்  ஏதமின்றிக் கிடப்பவும் சுரத்தில் நடத்தலால் வெம்மையுற்ற
காலினையுடைய    வழிபோவார்   தாம்வேண்டியவிடத்தே   தங்கவும்
களத்தின்கண்    நிறைந்த   நெற்பொலி   காவலின்றியே   கிடப்பவும்
எதிரில்நின்று  தடுக்கும்  பகையைத்  துரந்த  நிலங்கலங்காத செவ்விய
ஆட்சியினையும்  உலகத்தார்  புகழ்ந்த  விளங்கிய  போரைச்செய்யும்
ஒள்ளிய  வாளினையும் தப்பாத மொழியினையுமுடைய எழினி பொருது
போர்க்களத்தின்   கண்ணே  வீழப்,  பெற்ற  தாயால் கைவிடப்பட்ட
உண்ணாத  குழவியை  யொப்பத் தன்னைமேவிய கிளை இடந்தோறும்
இடந்தோறும்  வருந்த  மிக்க  பசிவருத்திய  கலக்கமுற்ற  துன்பமிக்க
நெஞ்சமோடு   அவனை   இழந்து  வருத்தமுற்றுக்  கிடந்த  உலகத்து
விதனத்தினும்  மிகப்  பெரிதாக  நீ  இழந்தாய், அறமில்லாத கூற்றமே!
வாழ்தலேதுவாக  வரும் வயலிடத்து விளையும் வருவாயையறியானாய்த்
தளர்ந்த  குடியையுடைய  உழவன்  விதையை  உண்டாற்போல  இந்த
ஒருவனது  பெறுதற்கரிய உயிரை உண்டிலையாயிற் பகைவருடைய பல
உயிரையும்