துகுப்பவுங் கொள்வன் கொல்லோ கோடுயர் பிறங்குமலை கெழீஇய நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே. |
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
|
அவனை அவர் பாடியது. (அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது). |
(இ - ள்.) அவனையின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி இல்லையாகுக ; யான் உயிர்வாழுநாளும் எனக்கு ஒருபயன்படாமையின் அவை யல்லவாக; நடப்பட்ட கல்லின்கட் பீலியைச் சூட்டி நாரால் அரிக்கப்பட்ட தேறலைச் சிறிய கலத்தான் உகுப்பவும் அதனைக் கொள்வனோ,கொள்ளானோ சிகரமோங்கிய உயர்ந்த மலைபொருந்திய நாடு முழுவதும் கொடுப்பவும் கொள்ளாதவன்?-எ - று. நாடுடன் கொடுப்பவும் கொள்ளாதோன் நாரரி சிறுகலத்துகுப்பவும் கொள்வன் கொல்லோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. |
(233) | பொய்யா கியரோ பொய்யா கியரோ |
பாவடி யானை பரிசிலர்க் கருகாச் சீர்கெழு நோன்றா ளகுதைகட் டோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ இரும்பா ணொக்கற் றலைவன் பெரும்பூட் போரடு தானை யெவ்வி மார்பின் எஃகுறு விழுப்புண் பலவென வைகுறு விடிய லியம்பிய குரலே. |
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
|
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
|
(இ - ள்.) பொய்யாகுக; பொய்யாகுக; பரந்த அடியினையுடைய யானையைப் பரிசிலர்க்குக் குறைவறக் கொடுக்கும் சீர்மைபொருந்திய வலிய முயற்சியையுடைய அகுதையிடத்து உளதாகிய பொன்னாற் செய்யப்பட்ட ஆழிபோலப் பொய்யாகுக; பெரிய பாண்சுற்றத்திற்கு முதல்வன், பேரணிகலத்தினையுடைய, |
 |