புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   848
Zoom In NormalZoom Out

 

மன்னே

அம்பொடு வேனுழை வழியெல்லாந்தானிற்கு மன்னே

நரந்த நாறுந் தன்கையாற்

புலவு நாறு மென்றலை தைவரு மன்னே

அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ

இரப்போர் கையுளும் போகிப்

புரப்போர் புன்கண் பாவை சோர

அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்

சென்றுவீழ்ந் தன்றவன்

அருநிறத் தியங்கிய வேலே

ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ

இனிப், பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்

பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்

சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்

றீயாது வீயு முயிர்தவப் பலவே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)
 

அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.
 

(இ - ள்.) சிறிய அளவினையுடைய மதுவைப் பெறின் எங்களுக்குத்
தருவன்;   அது   கழிந்தது!   பெரிய  அளவினையுடைய  மதுவைப்
பெற்றானாயின்  அதனை  யாமுண்டு  பாட  எஞ்சிய  மதுவைத் தான்
விரும்பி    நுகர்வான்;    அது    கழிந்தது!   சோறு   எல்லார்க்கும்
பொதுவாதலாற்   சிற்றளவினையுடைய   சோற்றின்கண்ணும்  மிகப்பல
கலத்தோடுங்கூட  உண்பன்;  அது  கழிந்தது! மிக்க அளவினையுடைய
சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன்; அது கழிந்தது!
என்போடுகூடிய    ஊன்றடியுளதாகிய    இடமுழுதும்    எங்களுக்கு
அளிப்பன்; அது கழிந்தது! அம்போடு வேல்தைத்து உருவும் இடமாகிய
போர்க்களமுழுதும்   தான்   சென்றுநிற்பன்;   அதுகழிந்ததே!  தான்
காதலிப்பார்க்கு  மாலை  சூட்டுதலான்  நரந்தப்பூ  நாறும் தன்னுடைய
கையால் தான் அருளுடைமையிற் புலால்நாறும் எம்முடைய