| |
தலையைத் தடவுவன்; அது கழிந்ததே! அரியதலைமையையுடைய பெரிய பாணரது அகலிய மண்டையின்கண்துளையையுருவி இரப்பவர் கையுளும் தைத்துருவித் தன்னாற் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய கண்ணிற்பாவை ஒளிமழுங்க அழகிய சொல்லை ஆராயும் நுண்ணிய ஆராய்ச்சியையுடைய அறிவினையுடையோர் நாவின்கண்ணே போய் வீழ்ந்தது, அவனது அரிய மார்பத்தின்கண் தைத்த வேல்; எமக்குப் பற்றாகிய எம்மிறைவன் எவ்விடத்துள்ளான் கொல்லோ? இனிப் பாடுவாரும் இல்லை; பாடுவார்க்கு ஒன்றீவாரும் இல்லை; குளிர்ச்சியையுடைய நீரையுடைய துறையின்கட் பகன்றையினது தேனைப் பொருந்திய பெரிய மலர் பிறராற் சூடப்படாது கழிந்தாற்போலப் பிறர்க்கு ஒருபொருளைக் கொடுக்காது மாய்ந்துபோம் உயிர் மிகப்பல-எ - று. |
அவன்நிறத்து உருவிய வேல் அவனுக்கு இறந்துபாட்டைச் செய்த லோடே பாணர் முதலாயினார்க்கும் இறந்துபாட்டினைச் செய்தலான் ஒருகாலத்தே யாவரிடத்தும் தைத்ததென்றாராகக் கொள்க. |
மன் கழிவின்கண் வந்தது. |
(236) | கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் |
சிலைகெழு குறவர்க் கல்குமிசை வாகும் |
மலைகெழு நாட மாவண் பாரி |
கலந்த கேண்மைக் கொவ்வாய் நீயெற் |
புலந்தனை யாகுவை புரந்த யாண்டே |
பெருந்தகு சிறப்பி னட்பிற் கொல்லா |
தொருங்குவரல் விடாஅ தொழிகெனக் |
 |