| |
வயிற்றினையும் பரந்த மார்பினையும் பசிய கண்ணினையும் குச்சுப்புல் நிரைத்தாற்போன்ற நிறம் பொருந்திய மயிரினையுடைய தாடியினையும் செவியிறந்து முன்னே தாழ்ந்த கதுப்பினையுமுடையனாய் வில்லுடனே யார்தான் இவ்வளிக்கத் தக்கான்றான்? ஆராயின், ஊரைப்பெரிதும் நீங்கினதும் இலன்; தனக்கு அரணெனக் கருதிக் காட்டைக் கைக்கொண்டதும் இலன்;இற்றைநாட் காலையே பொருந்தாதாரது இனமாகிய நிரை போகின்ற இடத்தைப் பார்த்துத் தன் கையாற் குறித்து மெல்ல எண்ணிக் கரந்தையார் செய்யும்பூசலை மாற்றி வில்லாலே கொடு போந்தனன்; அந்நிரைதாம் மிகப்பலவேயாயினும் என்னபயன்படும் எத்தன்மைத்தும், பால்முதலியன பெய்யப்படாமையிற் சிறிதும் வெள்ளிய முகந்தோன்றாத பானையைக் காண்டலுடனே, நாட்காலத்து உறைதெறிப்பக் கடையும் மத்தின் ஒலியைக் கேளாதபடி பிறருக்கு நேராகக் கொடுத்தல் வல்லனாயினான், அவனுக்கு?-எ - று. |
பகைவர் மேல் நடக்கவொட்டாது எதிரில் நின்று விலக்குதலின், ‘செருப்பிடைச் சிறுபர லன்னன்’ எனப்பட்டான். |
‘அன்ன’ என்று பாடமோதி, செருப்பிடைச் சிறுபரலோசைபோல நெடிய ஓசையையுடைய காலென்றுரைப்பாரும் உளர். |
யார்கொலென்றது அறியான்வினாதலன்றி வியப்பின்கண் வந்தது. |
‘ஊர்பெரி திகந்தன்று மிலனே’ என்பது நிரைகோட்கடுமை. |
சிறுபரலன்னன் கவுளனாகிய அளியனானவன்றான் யார்கொல்லோ? தேரின் வில்லோடு ஊர்பெரிது இகந்தன்றும் இலனாய்க் காடு கைக் கொண்டதும் இலனாய்நோக்கி எண்ணி மாற்றினான்; மாற்றிக் குழிசி காண்டலோடு மத்தொலி கேளாதோனாயினான்; அவனுக்கு அவைதாம்மிகப்பல வாயினும் என்னாம் எனக்கூட்டுக. |
கேளாதோற்கென உருபுவிரித்து உரைப்பினும் |
 |