வெகுளவுங்கூடுமென்பாரும் உளர். இவன் நிரைகொள்ளச் செல்கின்றமை கண்டார் கள்விலையாட்டிக்குக் கூறியது. (259) ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணாய் செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ளம் முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கு மான்மேற் புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே. திணை - கரந்தை; துறை - செருமலைதல்: பிள்ளைப்பெயர்ச்சியுமாம். ................கோடைபாடிய பெரும்பூதனார் பாடியது. செருமலைதலாவது:- ‘’வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ உட்குவரத் தாக்கி யுளர்செருப் புரிந்தன்று’’ (பு. வெ. 25) (இ - ள்.) தாம் கொள்ளப்பட்ட ஏற்றையுடைய பெரிய ஆனிரை முன்னே போக மீட்கவருவாரைக் குறித்து அந்நிரையோடு தாம் போகாது தழையால் மூடிய பெரிய காட்டின்கண் தலைகரந்திருந்த வலிய வில்லையுடைய மறவரது ஒடுங்கிய நிலையைக் கருதாய்; போகாதொழி, போகாதொழி,நினது மேற்கோள் சிறப்பதாக, தெய்வம் மெய்யின்கண் ஏறிய புலைமகளையொப்பத் தாவித் துள்ளும் ஆனிரைமேல்; மருங்கிலே விளங்காநின்ற ஒள்ளிய வாளினையும் வீரக்கழலினையுமுடையோய்! -எ - று. புனைகழலோய்! காணாய்; ஆன்மேற் செல்லல், செல்லல்; நின் உள்ளம் சிறப்பதாகவெனக் கூட்டுக. செல்லலென்றது அவரைக் கண்டு பொருதுகொன்றன்றிச் செல்ல லென்பதாம். (260) வளரத் தொடினும் வௌவுபு திரிந்து விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத் தளரு நெஞ்சந் தலைஇ மனையோள் உளருங் கூந்த னோக்கிக் களர கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப் பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக் காணலென் கொல்லென வினவினை வரூஉம் பாண |