திணை - வெட்சி; துறை - உண்டாட்டு; தலைத்தோற்றமுமாம்.
................மதுரைப் பேராலவாயார் பாடியது.
தலைத்தோற்றமாவது:-
‘’உரவெய்யோ னினந்தழீஇ
வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று’’ (பு. வெ.12)
(இ - ள்.) மதுவையும் அலைத்துண்ணும்படி பிழிமின்; ஆட்டுவிடை
யையும் படுமின்; பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய
பந்தரின்கண் நீர் கொழித்துக் கொடுவரப்பட்ட இளைய மணலை
நிரம்பப் பரப்புமின்; பகைவரது தூசிப்படையை முறித்துப்
பெயர்ந்துபோகிற தனது படைக்குப்பின்னே நின்று நிரையுடனே
வருகின்ற என் இறைவனுக்குப் பக்கமறவராய் நிரைகொண்டுவருவோர்
அவன் றன்னினும் பெரிய இளைப்பையுடையர்-எ - று.
சாயல் - விடாயாலுண்டான மென்மை.
என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மினெனக்கூட்டுக.
(263) பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறி யாயிற்
றொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே
பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா விளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ்