| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 861 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 3... | அருந் தொழில் சாயாக் கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி! நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்; பொலங் கழற் கால், புலர் சாந்தின் விலங்கு அகன்ற வியல் மார்ப! ஊர் இல்ல, உயவு அரிய, நீர் இல்ல, நீள் இடைய, பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின், செந் தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை, திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் உன்ன மரத்த துன் அருங் கவலை, நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் - அது முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் இன்மை தீர்த்தல் வன்மையானே. |
| திணையும்
துறையும் அவை. (பாடாண்திணை, செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்) பாண்டியன் கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியது. | |
| 4 | வாள், வலம் தர, மறுப் பட்டன செவ் வானத்து வனப்புப் போன்றன; தாள், களம் கொள, கழல் பறைந்தன கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன; தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ, நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; மாவே, எறி பதத்தான் இடம் காட்ட, கறுழ் பொருத செவ் வாயான், எருத்து வவ்விய புலி போன்றன; களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய், நுதி மழுங்கிய வெண் கோட்டான், உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, மாக் கடல் நிவந்து எழுதரும் செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ - அனையை ஆகன்மாறே, தாய் இல் தூவாக் குழவி போல, ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே. |
| திணை: வஞ்சி; துறை: கொற்றவள்ளை. சோழன் உருவப் பல் தேர் இளஞ்சேட்சென்னியைப் பரணர் பாடியது. | |
| 5 | எருமை அன்ன கருங் கல் இடை தோறு, ஆனின் பரக்கும் யானைய, முன்பின், கானக நாடனை! நீயோ, பெரும! நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்: அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல், குழவி கொள்பவரின், ஓம்புமதி! அளிதோ தானே; அதுபெறல் |