புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   862
Zoom In NormalZoom Out

5...
 
அருங்குரைத்தே.
 
 
திணை: பாடாண்திணை; துறை: செவியறிவுறூஉ; பொருண்மொழிக்
காஞ்சியும் ஆம்.
 
சேரமான்   கருவூர்   ஏறிய   ஒள்வாட்  கோப்  பெருஞ்சேரல்
இரும்பொறையைக்  கண்ட  ஞான்று,  நின் உடம்பு பெறுவாயாக!
என,  அவனைச்  சென்று  கண்டு,  தம்  உடம்பு  பெற்று நின்ற
நரிவெரூஉத்தலையார் பாடியது.
 
6
 
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்,
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும்,
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்,
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின்
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத்தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து,
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி,
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து,
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி,
பணியியர் அத்தை, நின் குடையே - முனிவர்
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி - சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே!
வாடுக, இறைவ! நின் கண்ணி - ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே!
செலியர் அத்தை, நின் வெகுளி - வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே!
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி!
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே!
 
 
திணையும்   துறையும்   அவை;   துறை  வாழ்த்தியலும்  ஆம்.
(பாடாண்திணை, செவியறிவுறூஉ)
 
பாண்டியன்    பல்யாகசாலை    முதுகுடுமிப்   பெருவழுதியைக்
காரிக்கிழார் பாடியது.
 
7
 
களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்து அடி,
கணை பொருது கவி வண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,
மா மறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் - இயல்