| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 863 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 7... | தேர் வளவ! தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து மீனின் செறுக்கும் யாணர்ப் பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே. |
| திணை: வஞ்சி; துறை: கொற்றவள்ளை; மழபுல வஞ்சியும் ஆம். சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது. | |
| 8 | வையம் காவலர் வழி மொழிந்து ஒழுக, போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது, இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை, கடந்து அடு தானைச் சேரலாதனை யாங்கனம் ஒத்தியோ? - வீங்கு செலல் மண்டிலம்! பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி; மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி; அகல் இரு விசும்பினானும் பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே. |
| திணை:
பாடாண்திணை; துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆம். சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது. | |
| 9 | 'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் எம் கோ, வாழிய, குடுமி - தம் கோச் செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி; பூவை நிலையும் ஆம்) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது. | |
| 10 | வழிபடுவோரை வல் அறிதீயே; பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே; நீ மெய் கண்ட தீமை காணின்; ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி; வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே - அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில் வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப! செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ், நெய்தலங்கானல் நெடியோய்! |