| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 864 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 10... | எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே! |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி; பூவை நிலையும் ஆம்) சோழன் நெய்தலங்கானல் இளஞ் சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது. | |
| 11 | அரி மயிர்த் திரள் முன்கை, வால் இழை, மட மங்கையர் வரி மணல் புனை பாவைக்குக் குலவுச் சினைப் பூக் கொய்து, தண் பொருநைப் புனல் பாயும், விண் பொரு புகழ், விறல் வஞ்சி பாடல் சான்ற விறல் வேந்தனும்மே, வெப்பு உடைய அரண் கடந்து, துப்பு உறுவர் புறம் பெற்றிசினே; புறம் பெற்ற வய வேந்தன் மறம் பாடிய பாடினியும்மே, ஏர் உடைய விழுக் கழஞ்சின், சீர் உடைய இழை பெற்றிசினே; இழை பெற்ற பாடினிக்குக் குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே, என ஆங்கு, ஒள் அழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப் பெற்றிசினே. |
| திணை: பாடாண்திணை; துறை: பரிசில் கடாநிலை. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது. | |
| 12 | பாணர் தாமரை மலையவும், புலவர் பூநுதல் யானையொடு புனை தேர் பண்ணவும், அறனோ மற்று இது - விறல் மாண் குடுமி! இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு, இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே? |
| திணை அது; துறை: இயன்மொழி. (பாடாண்திணை) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது. | |
| 13 | 'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே புலிநிறக் கவசம் பூம் பொறி சிதைய எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின், மறலி அன்ன களிற்று மிசையோனே; களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும் பல் மீன் நாப்பண் திங்கள் போலவும், சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப, மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே; நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! பழன மஞ்ஞை உகுத்த பீலி கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும், கொழுமீன், விளைந்த கள்ளின், விழு நீர் வேலி நாடு கிழவோனே. |
| திணை: பாடாண் திணை; துறை: வாழ்த்தியல். சோழன் முடித் தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் |