| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 866 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 15... | விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின் பாடினி பாடும் வஞ்சிக்கு நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே. |
| திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, வாழ்த்தியல்) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது. | |
| 16 | வினை மாட்சிய விரை புரவியொடு, மழை உருவின தோல் பரப்பி, முனை முருங்கத் தலைச் சென்று, அவர் விளை வயல் கவர்பூட்டி, மனை மரம் விறகு ஆகக் கடி துறை நீர்க்களிறு படீஇ, எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற, புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை, துணை வேண்டாச் செரு வென்றி, புலவு வாள், புலர் சாந்தின், முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்! மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், பனிப் பகன்றை, கனிப் பாகல், கரும்பு அல்லது காடு அறியாப் பெருந் தண் பணை பாழ் ஆக, ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை, நாம நல் அமர் செய்ய, ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே. |
| திணை: வஞ்சி; துறை: மழபுலவஞ்சி. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது. | |
| 17 | தென் குமரி, வட பெருங்கல், குண குட கடலா எல்லை, குன்று, மலை, காடு, நாடு ஒன்று பட்டு வழிமொழிய, கொடிது கடிந்து, கோல் திருத்தி, படுவது உண்டு, பகல் ஆற்றி, இனிது உருண்ட சுடர் நேமி முழுது ஆண்டோர் வழி காவல! குலை இறைஞ்சிய கோட் தாழை அகல் வயல், மலை வேலி, நிலவு மணல் வியன் கானல், தெண் கழிமிசைத் தீப் பூவின், தண் தொண்டியோர் அடு பொருந! மாப் பயம்பின் பொறை போற்றாது, நீடு குழி அகப்பட்ட பீடு உடைய எறுழ் முன்பின், கோடு முற்றிய கொல் களிறு நிலை கலங்கக் குழி கொன்று கிளை புகலத் தலைக்கூடியாங்கு - நீ பட்ட அரு முன்பின் பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப, பிறிது சென்று, மலர் தாயத்துப் பலர் நாப்பண் மீக்கூறலின் 'உண்டாகிய உயர் மண்ணும் சென்று பட்ட விழுக் கலனும் பெறல் கூடும், |