| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 867 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 17... | இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும், 'ஏந்து கொடி இறைப் புரிசை, வீங்கு சிறை, வியல்அருப்பம், இழந்து வைகுதும், இனி நாம் - இவன் உடன்று நோக்கினன், பெரிது' எனவும், வேற்று அரசு பணி தொடங்கு நின் ஆற்றலொடு புகழ் ஏத்தி, காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய மழை என மருளும் பல் தோல், மலை எனத் தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை, உடலுநர் உட்க வீங்கி, கடல் என வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப, இடி என முழங்கும் முரசின், வரையா ஈகைக் குடவர் கோவே! |
| திணை: வாகை; துறை: அரசவாகை; இயன்மொழியும் ஆம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க்கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது. | |
| 18 | முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியல் ஞாலம் தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ, ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்! ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய பெருமைத்தாக, நின் ஆயுள்தானே! நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் பூக் கதூஉம் இன வாளை, நுண் ஆரல், பரு வரால், குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி; வான் உட்கும் வடி நீள் மதில்; மல்லல் மூதூர் வய வேந்தே! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி, ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன் தகுதி கேள், இனி, மிகுதியாள! நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே; வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன் வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே; அதனால், அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே நிலன் நெளி மருங்கில் |