| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 868 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 18... | நீர் நிலை பெருகத் தட்டோர் அம்ம, இவண் தட்டோரே; தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. |
| திணை: பொதுவியல்; துறை: முதுமொழிக்காஞ்சி. பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது. | |
| 19 | இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை, தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து, மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும், நின்னொடு தூக்கிய வென் வேற் செழிய! 'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி, முயங்கினேன் அல்லனோ, யானே - மயங்கிக் குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல, அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத் தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து, நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள, எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்; 'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என, மூதிற் பெண்டிர் கசிந்து அழ, நாணி, கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை, எழுவர் நல் வலம் கடந்தோய்! நின் கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே? |
| திணை: வாகை; துறை: அரசவாகை. பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது. | |
| 20 | இரு முந்நீர்க் குட்டமும், வியல் ஞாலத்து அகலமும், வளி வழங்கு திசையும், வறிது நிலைஇய காயமும், என்றாங்கு அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை, அறிவும், ஈரமும், பெருங் கண்ணோட்டமும்: சோறு படுக்கும் தீயொடு செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது பிறிது தெறல் அறியார், நின் நிழல் வாழ்வோரே; திருவில் அல்லது கொலை வில் அறியார்; நாஞ்சில் அல்லது படையும் அறியார்; திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய, அப் பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது, பகைவர் உண்ணா அரு மண்ணினையே; அம்பு துஞ்சும் கடி அரணால் அறம் துஞ்சும் செங்கோலையே; புதுப் புள் வரினும், பழம் புள் போகினும், விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை; அனையை ஆகல்மாறே, மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே. |
| திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது. | |
| 21 | புல வரை இறந்த புகழ்சால் தோன்றல்! 'நில வரை இறந்த குண்டு கண் அகழி, வான் தோய்வு அன்ன புரிசை, விசும்பின் |