| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 870 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 22... | எனக் கேட்டு வந்து, இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை, வேறு புலத்து இறுக்கும் தானையொடு, சோறு பட நடத்தி - நீ துஞ்சாய்மாறே! |
| திணையும் துறையும் அவை; துறை: இயன்மொழியும் ஆம். (வாகை, அரசவாகை) சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது. | |
| 23 | 'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ, களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்; கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் கூர் நல் அம்பின் கொடுவில் கூளியர் கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் கொள்பதம் ஒழிய வீசிய புலனும்; வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர் வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி, நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று, இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும் துன்னல் போகிய துணிவினோன்' என, ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட கால முன்ப! நின் கண்டனென் வருவல் - அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென, சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை வேளை வெண் பூக் கறிக்கும் ஆள் இல் அத்தம் ஆகிய காடே. |
| திணையும்
துறையும் அவை; துறை: நல்லிசை வஞ்சியும் ஆம். (வாகை, அரசவாகை) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது. | |
| 24 | நெல் அரியும் இருந் தொழுவர் செஞ் ஞாயிற்று வெயில் முனையின், தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; திண் திமில் வன் பரதவர் வெப்பு உடைய மட்டு உண்டு, தண் குரவைச் சீர் தூங்குந்து; தூவற் கலித்த தேம் பாய் புன்னை மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் இரும் பனையின் குரும்பை நீரும், பூங் கரும்பின் |