| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 871 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 24... | தீம் சாறும், ஓங்கு மணல் குவவுத் தாழைத் தீம் நீரோடு உடன் விராஅய், முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய ஓம்பா ஈகை மா வேள் எவ்வி புனல் அம் புதவின் மிழலையொடு - கழனிக் கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், குப்பை நெல்லின், முத்தூறு தந்த கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே - நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு நின்று மூத்த யாக்கை அன்ன, நின் ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, இரவல் மாக்கள் ஈகை நுவல ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப - தொல் இசை மலர் தலை உலகத்துத் தோன்றி, பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. |
| திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக் காஞ்சி. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடி கிழார் பாடியது. | |
| 25 | மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு, நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தாஅங்கு, உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி, பிணியுறு முரசம் கொண்ட காலை, நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல் செழிய! - முலை பொலி ஆகம் உருப்ப நூறி, மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல் ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர, அவிர் அறல் கடுக்கும் அம் மென் குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே. |
| திணை: வாகை; துறை: அரசவாகை. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது. | |
| 26 | நளி கடல் இரும் குட்டத்து வளி புடைத்த கலம் போல, களிறு சென்று களன் அகற்றவும், களன் அகற்றிய வியல் ஆங்கண் ஒளிறு இலைய எஃகு ஏந்த, அரைசு பட அமர் உழக்கி, உரை செல முரசு வௌவி, முடித் தலை அடுப்பு ஆக, |