| புறநானூறு |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 872 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
| 26... | புனற் குருதி உலைக் கொளீஇ, தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின், அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய! ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை, நான் மறை முதல்வர் சுற்றம் ஆக, மன்னர் ஏவல் செய்ய, மன்னிய வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே! நோற்றோர் மன்ற - நின் பகைவர் நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே. |
| திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடி கிழார் பாடியது. | |
| 27 | சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன, வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து, வீற்றிருந்தோரை எண்ணும் காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே; மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே; 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப, தம் செய் வினை முடித்து' எனக் கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும், அறியாதோரையும் அறியக் காட்டி, திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர் கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே. |
| திணை: பொதுவியல்; துறை: முதுமொழிக்காஞ்சி. சோழன் நலங் கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது. | |
| 28 | 'சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும் கூனும், குறளும், ஊமும், செவிடும், மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் பேதைமை அல்லது ஊதியம் இல்' என, முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும், அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது - வட்ட வரிய செம் பொறிச் சேவல் ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் கானத்தோர், நின் |